கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அருதங்குடி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கமலாம்மாள் என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் மது விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
கமலாம்பாளின் மகன் பாலமுருகனுக்கு சகுந்தலா எனும் பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. மருமகள் சகுந்தலாவிற்கும், மாமியார் கமலாம்பாளுக்கும் மது விற்பனை செய்வது தொடர்பாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சகுந்தலா தொடர்ச்சியாக கமலாம்பாளை மது விற்கவிடாமல் தடுத்துள்ளார்.
இதையடுத்து சில மாதங்களாக மது விற்பனையில் ஈடுபடாமல் இருந்த கமலாம்பாள், பொங்கலையொட்டி மீண்டும் தனது தொழிலை தொடங்கியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள், கமலாம்பாளின் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த கீற்று கொட்டகையை நேற்று (ஜன.16) கலைத்தனர்.