தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை? - தாய், சேய் உயிரிழப்பு! - கர்ப்பிணி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்த நிலையில் தாயும் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

death
death

By

Published : Oct 31, 2020, 8:34 AM IST

தியாகதுருகத்தை அடுத்துள்ள நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகம். 9 மாத கர்ப்பிணியான கற்பகத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, தியாகதுருகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று காலை சேர்த்துள்ளனர். அங்கு கற்பகத்திடம் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி, செவிலியர் சிகிச்சை அளிக்காமல் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சுகப்பிரசவம் பலனளிக்காமல், இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. மேலும், கற்பகத்தின் உடல்நிலை மோசமாக இருப்பதால், அவரை கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் சொன்னதையடுத்து உடனடியாக அங்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளித்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கற்பகம் உயிரிழந்துள்ளார்.

தவறான சிகிச்சை; தாய், சேய் உயிரிழப்பு!

இதையடுத்து, தவறான சிகிச்சையாலேயே கற்பகமும் குழந்தையும் இறந்ததாக, அவரது உறவினர்கள் தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருமணமாகி 9 மாதங்களே ஆன நிலையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குழந்தை உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தல் - இளம் பெண் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details