கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் இன்று (ஜூலை 20) பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, அவர், "கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணம் என்பது துரதிஷ்டவசமானது.
கலவரத்தில் ஈடுபட்ட உள் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என யாராக இருந்தாலும் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் காவல் துறை சார்பில் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் அடிப்படையில் கைது நடவடிக்கை தொடரும்.
புதிய எஸ்பி பகலவன் பேட்டி கலவரம் தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணைக்கு மாவட்ட காவல் துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும். பள்ளி மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு குறித்து மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் பள்ளிகளிலும், பெற்றோர்களிடமும் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வியில் தோல்வி ஏற்பட்டால் கூட அந்த தோல்வியை படிக்கட்டாக கொண்டு முன்னேற்றமடைய மாவட்ட நிர்வாகத்துடன், மாவட்ட காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை ஒழிக்க தனிப்படை அமைத்து முற்றிலும் ஒழிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி தற்கொலை விவகாரம்: தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை