கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை அமைந்துள்ளது. கோமுகி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கல்வராயன்மலை பகுதியில் தொடர்ந்து இரண்டு தினங்களாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அணை நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து அதிக அளவிலான நீர் வந்துகொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு நலன்கருதி அணையில் 44 கனஅடி நீர் இருப்புவைக்கப்பட்டு, அணையிலிருந்து சுமார் 1,100 கனஅடி நீர் ஆற்று வாய்க்கால்களில் திறந்துவிடப்பட்டுள்ளது.