தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் வாக்குப்பதிவு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்! - கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தனியார் பள்ளி கூட்டரங்கில் வாக்குப்பதிவு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சியில்  வாக்குபதிவு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்!
கள்ளக்குறிச்சியில் வாக்குபதிவு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்!

By

Published : Mar 9, 2021, 5:12 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட், விவிபேட் செயல்பாடுகள் குறித்தும் தேர்தல் நாளன்றும் முந்தைய நாளன்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் கையாளக்கூடிய படிவ அறிக்கைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

அந்தவகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத் தேர்தல் அலுவலர் கிரண்குராலா தலைமையில் இன்று (மார்ச் 9) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள மண்டல அலுவலர்களுக்குத் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் வாக்குப்பதிவு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்!

இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், கள்ளக்குறிச்சி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன், திருக்கோவிலூர் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...பேரவைத் தேர்தல் 2021 - அதிமுகவிலிருந்து விலகிய தேமுதிக

ABOUT THE AUTHOR

...view details