கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்துள்ள மஞ்சபுத்தூர் கிராமத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இயங்கிய சிறிய நெல் அரவை மில் தற்போது நவீன அரிசி ஆலையாக மாற்றப்பட்டது. இந்த நவீன அரிசி ஆலை அதிக அளவில் மரக்கட்டைகளை கொண்டு நெல் அவியல் போட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
இந்த அரிசி ஆலை மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது. இங்கு, கழிவு நீரை உரிய பாதுகாப்பில்லாமல், தெருக்களில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்கள் மூலம் வெளியேற்றப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், ஆலையிலிருந்து வெளியேறும் நெல் உமி, கரித்துகள்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும், குடிநீரிலும் கலந்து மாசு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.