தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி மேலாண்மை குழு தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - வேல்முருகன்

காவிரி மேலாண்மை குழு தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

By

Published : Jun 22, 2022, 11:26 AM IST

Updated : Jun 22, 2022, 2:06 PM IST

velmurugan-says-cauvery-management-committee-chairman-should-be-disqualified காவிரி மேலாண்மை குழு தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - வேல்முருகன்
velmurugan-says-cauvery-management-committee-chairman-should-be-disqualified காவிரி மேலாண்மை குழு தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - வேல்முருகன்

கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆஷிக் அகமது புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ராணுவத்தில் ஆள் சேர்ப்பது என்பது சுதந்திர இந்தியாவில் தொன்றுதொட்டு நடந்து வருகின்ற ஒரு நிகழ்வு.

முறையாக அவர்களைத் தேர்வு செய்து, பயிற்சி அளித்து எல்லையில் இந்த தேசத்தை காப்பதற்காக தன் உயிரை துச்சமாக நினைத்து களத்தில் நிற்கக் கூடியவர்கள் நம் இந்திய தேசத்தின் ராணுவ வீரர்கள். இந்தியாவில் இருந்த ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வகுத்தளித்த பதவி இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் (பிரதமர்) பதவி அவர்கள் காலத்தில் என்ன நடைமுறையில் இருந்தது. அதே நடைமுறைதான் ராணுவ பணிக்கு ஆள் சேர்க்க நிகழ்விலும் இருக்க வேண்டும்.

தனியாருக்கு குத்தகை விடுவதுபோல், கடலை குத்தகை விட்டார்கள். அம்பானிக்கு அதானிக்கு அவர்களுக்காக எல்லாவற்றிற்கும் தனியார் மயமாக்குவது நிகழ்வு போல் இந்திய நாட்டின் பாதுகாப்பையும் தனியாரிடம் ஒப்படைப்பது அல்லது தனியார் ஏஜென்சி மூலமாக ராணுவத்திற்கு ஆள்கள் தேர்வு செய்வது அல்லது ஒப்பந்த அடிப்படையில் பிடிப்பில்லாமல் இளைஞர்களைக் கொண்டுபோய் அதிலே திணிப்பது ஏற்புடையது செயலல்ல.

காவிரி மேலாண்மை குழு தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - வேல்முருகன்

இந்தியாவே பற்றிக்கொண்டு எரிகிறது. ஆகையால் இந்த திட்டத்தை உடனடியாக தலைமை அமைச்சரும் ராணுவ அமைச்சகமும் உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை வைக்கிறது. மேலும் மேகதாது குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது அவர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு ஆதரவாக இருப்பது.

பிரதமர் மௌனம் காப்பது மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஆதரவாக இருப்பது மற்றும் காவேரி மேலாண்மை ஆணைய உடைய தலைவராக இருப்பவர் ஒரு சார்பு நிலை எடுப்பது கண்டிக்கத்தக்கது. ஆதலால் காவேரி மேலாண்மை வாரிய தலைவரை உடனடியாக அந்தப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை வைக்கிறது" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவர்கள் கொண்ட குழு டெல்லியில் இன்று (ஜூன்.22) இந்திய நாட்டின் நீர்ப்பாசனத் துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறது. அப்போது எமது கட்சியின் சார்பாக தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழருக்கும் விவசாயிகளுக்கும் துரோகமிழைக்கும் காவேரி மேலாண்மை தலைவர் பொறுப்பில் இருப்பவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்போம்" என்றார்.

அதிமுக ஒற்ற தலைமை குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளித்த வேல்முருகன் உட்கட்சி விவகாரம் என்றும் அந்த கட்சியின் செயற்குழு பொதுக்குழு கூடி முடிவெடுக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்விக்குப் பதிலளித்த வேல்முருகன், விரைவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக எங்களது கட்சியில் இருக்கும் இளைஞர்கள் மாணவர்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய வேல்முருகன், ஜனாதிபதி தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரிக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்போம்" என்றார்.

இதையும் படிங்க: மேகதாது விவகாரம்: 'மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்' - அமைச்சர் துரைமுருகன்

Last Updated : Jun 22, 2022, 2:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details