தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - லஞ்சம் வாங்கிய விஏஓ

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ. ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

vao-sentenced-to-four-years-for-bribery-court-action
vao-sentenced-to-four-years-for-bribery-court-action

By

Published : Mar 4, 2020, 11:11 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஏமம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாண ராஜா. விவசாயியான இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலராக இருந்த கார்த்திக் ராஜாவை அணுகியுள்ளார்.

அப்போது பட்டா மாற்றம் செய்வதற்கு கல்யாண ராஜாவிடம், ரூ. ஐந்தாயிரத்தை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ராஜா லஞ்சமாக பெற்றுள்ளார். இதனை கண்காணித்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ராஜாவை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆறு வருடங்களாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மோகன் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ராஜாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை..!

ABOUT THE AUTHOR

...view details