கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தை தற்காலிக ஓட்டுநர், இயக்கினார். இந்தப் பேருந்து உளுந்தூர்பேட்டை அரசு பணிமனை எதிரே சென்ற போது, முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்தில் இரண்டு பேருந்துகளும் அதிக சேதமடைந்தன. பேருந்து விபத்துக்குள்ளானதால், சென்னை செல்வதற்கு பேருந்து இல்லாமல், பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், காவல் துறையினர், பயணிகளை சமாதானம் செய்து, மாற்றுப்பேருந்து ஏற்பாடு செய்தனர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போக்குவரத்து தொழிலாளர்களை உடனடியாக அழைத்து, தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.