கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள செங்குறிச்சி கிராமத்தில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் 100க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள்தோறும் இந்தச் சுங்கச்சாவடியைக் கடந்து செல்கின்றன.
ஊழியர்கள் 7 பேருக்கு கரோனா... உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி மூடல்! - uluntherpettai toll gate closed
கள்ளக்குறிச்சி: உளுந்தூர் பேட்டை அடுத்துள்ள செங்குறிச்சியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து சுங்கச்சாவடி மூடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் ஏழு பேருக்கு கரோனா.. உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி மூடல்
இந்தச் சூழ்நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஏழு பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து தொற்று பரவாமல் இருக்க உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மூடப்பட்டுள்ளது. மேலும், அங்கு பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை