கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரி என்பவர், அதே ஊரில் 'நியூ ரோஷிகா' என்ற மருந்துக்கடை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் முத்துக்குமாரி, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்பவருடன் அதே ஊரைச் சேர்ந்த செல்வி என்ற கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்தபோது, செல்வி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, ரிஷிவந்தியம் காவல் துறையினர் முத்துக்குமாரி மற்றும் கவிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, இவர்கள் பொது அமைதி மற்றும் பொது ஒழுக்கத்திற்கு பாதகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால், இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன்படி காவல் துறையினர் முத்துக்குமாரி, கவிதாவை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் சிறையில் இன்று(மார்ச் 21) அடைத்தனர்.
இதையும் படிங்க: டெல்லியிலிருந்து 100 பயணிகளுடன் பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானம்!