தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இருவர் உயிரிழப்பு - உளுந்தூர்பேட்டை விபத்து

கள்ளக்குறிச்சி: இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பைக்குகள் நேருக்குநேர் மோதல்: இருவர் பலி!
பைக்குகள் நேருக்குநேர் மோதல்: இருவர் பலி!

By

Published : Mar 14, 2020, 10:14 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொணலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் (50). இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருவெண்ணைநல்லூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது அதே திசை நோக்கி ஆனந்தராஜ் (24), மணிவண்ணன் (23), செல்வம்(20) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து, எதிரே வந்த முனியனின் வண்டி மீது மோதியுள்ளனர்.

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இருவர் உயிரிழப்பு

இந்த விபத்தில் முனியன், ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்து, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details