விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் புதுச்சேரியிலிருந்து சேலத்திற்கு லோடு லாரியை ஓட்டிச்சென்றுள்ளார். இந்த லாரி உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமம் அருகே வந்துகொண்டிருந்தபோது லாரி ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் லாரி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த சுமார் 25 லட்சம் மதிப்பிலான சோப்பு பெட்டிகள் சரிந்து விழுந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாகச் சென்று பெட்டிகளை அள்ளிச் சென்றனர். இதேபோல், செஞ்சியிலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற லாரி ஒன்று பாதி வழியில் எதிர்பாராத விதமாக சாலையின் இடது புறத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது லாரியில் இருந்த நெல் மூட்டைகள் சாலையிலேயே சரிந்து விழுந்ததைப் பார்த்த கிராம மக்கள் அவற்றை அள்ளிச் சென்றனர்.