கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட பிரகாஷ் நகர்ப் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக கைகலப்பு ஏற்பட்டு அது முற்றியதில் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொண்டனர்.
இதில் ஆறு பேர் படுகாயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.