கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேலத்திலிருந்து வந்த காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த அனிதா என்பவரும், இருசக்கர வாகனத்தில் வந்த முனியன் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், விபத்தில் காயமடைந்த நான்கு பேரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.