கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியே சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த லாரியை மடக்கி சோதனையிட்டனர்.
மூன்று டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது! - கள்ளக்குறிச்சி
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே லாரியில் கடத்தி வந்த மூன்று டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக இருவரை கைது செய்தனர்.
![மூன்று டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது! two arrested for smuggling three tonnes](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10131499-thumbnail-3x2-rice.jpg)
two arrested for smuggling three tonnes
சோதனையில் லாரியில் மூன்று டன் ரேஷன் அரிசி மூட்டைகளாகப் பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை வேலூருக்குக் கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மூன்று டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த திருக்கோவிலூர் காவல்துறையினர், அரிசியைக் கடத்தியதாக முதலூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, வேலூரைச் சேர்ந்த ஓட்டுனர் மனோகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து கைதான இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.