தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாடா சுமோவில் சாராயம் கடத்தல்: இருவர் கைது - 150 லிட்டர் சாராயம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே டாடா சுமோவில் சாராயம் கடத்திவந்த இருவரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

arrest
arrest

By

Published : Dec 7, 2020, 12:24 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அதிகளவில் சாராயம் காய்ச்சி விற்பதற்காக சங்கராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மலைப்பகுதியிலிருந்து கடத்திவருவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தகவலின்பேரில், வடபொன்பரப்பி காவல் உதவிஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் புளியங்கொட்டை பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கல்வராயன் மலையிலிருந்து சங்கராபுரம் நோக்கிவந்த வாகனத்தை மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில், 150 லிட்டர் சாராயம் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சாராயம், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்து சாராயத்தை கடத்திய இருவரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:இடுக்கியில் தோட்டத் தொழிலாளிகள் இருவர் வெட்டிக்கொலை

ABOUT THE AUTHOR

...view details