கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையிலான காவல் துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் 2 மூட்டைகளுடன் வருவதைக் கண்டனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா கடத்திச் சென்ற இருவர் கைது! - போதை பொருட்கள்
கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திச் சென்ற இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திச் சென்ற இருவர் கைது!
அவர்களைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடத்திவரப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 60 ஆயிரம் வரை இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போதை பொருளை கடத்தி வந்த இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேகமாக சென்ற வண்டிகள் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி