தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சியில் தொடர் திருட்டு - இருவர் கைது

கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை தொடர்ந்து திருடி வந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இருவர் கைது
இருவர் கைது

By

Published : Jul 25, 2021, 2:46 PM IST

கள்ளக்குறிச்சி:கச்சிராயப்பாளையம், சின்ன சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன், இருசக்கர வாகனம் திருட்டு போகும் சம்பவம் அதிகரித்து வந்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மடக்கி பிடித்து விசாரணை

கச்சிராயப்பாளையம் அருகே காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த விஜி, பிரதாப் ஆகிய இருவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் தொடர்ந்து பல இடங்களில் செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடியது தெரியவந்தது.

இருவர் சிறையில் அடைப்பு

இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 15 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details