கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவானது திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டு வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டு காலமாக கரோனா தாக்கத்தால் திருவிழாவானது நின்றுபோனது. இதனிடையே இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவானது வருகிற பதினெட்டாம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இத்திருவிழாவிற்கு வெளி மாநிலமான மகாராஷ்டிரா,கர்நாடகா கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திருநங்கைகள் திருவிழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் எனவும், திருவிழாவின் போது திருநங்கைகள் தங்குவதற்கு கூடாரம் அமைக்க கோரியும், கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துனர்.