கள்ளக்குறிச்சி:உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 126-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 26 பணியாளர்களை சுங்கச்சாவடி நிறுவனம் நேற்றுடன் (செப்.30) பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி பணி நீக்கம் செய்தது. இருப்பினும் அவர்கள் இன்று (அக்.01) வழக்கம் போல் பணிக்கு வந்தனர். ஆனால் பணி செய்ய அனுமதிக்காததால் மற்ற ஊழியர்களும் அவர்களுக்கு ஆதரவாக பணி செய்யாமல் எதிரே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... பணம் செலுத்தாமல் செல்லும் வாகனங்கள்... - கள்ளக்குறிச்சி சுங்கச்சாவடி
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 26 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் சக ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் இடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பணம் செலுத்தாமல் சுங்கசாவடியை கடந்து செல்கின்றன. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் செங்குறிச்சி சுங்கச்சாவடிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் ட்ராக் முறை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் இதுபோன்ற ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழகம் வரும் யூதர்களை குறிவைத்து தாக்க பிஎஃப்ஐ அமைப்பு திட்டம் ; என்ஐஏ தகவல்