தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் சாலை மறியல்! - செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

கள்ளக்குறிச்சி: செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து செல்போன் அமைக்கத் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கிராம மக்கள் சாலை மறியல்!
கிராம மக்கள் சாலை மறியல்!

By

Published : Mar 13, 2020, 12:30 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், எஸ்.ஒகையூர் கிராமத்தின் மையத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் செல்போன் அமைப்பதற்கான கடந்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதி பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இப்பிரச்னை தொடர்பாக சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம், நீதிமன்றத்தை அணுகி எஸ்.ஒகையூர் கிராமத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றது. இதையடுத்து டவர் அமைக்கும் பணியை மேற்கொள்ள காவல்துறையினர் உதவியுடன் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் டவர் அமைக்கப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெறும் இடத்தில் ஒன்று திரண்டனர். இருப்பினும் காவல்துறையினர் உதவியுடன் தனியார் நிறுவன ஊழியர்கள் பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தவில்லை.

கிராம மக்கள் சாலை மறியல்!

பள்ளம் தோண்டு பணியால், அப்பகுதியைச் சுற்றிய வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து டவர் அமைப்பதற்குத் தோண்டப்பட்ட பள்ளத்தை மூடும் போராட்டத்திலும் ஈடுபட்ட அவர்கள், ஊரின் மையப்பகுதியில் டவர் அமைப்பதால் ஜெனரேட்டர் சத்தம், கதிர்வீச்சு காரணமாக, மனிதர்களும், கால்நடையும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

ABOUT THE AUTHOR

...view details