கள்ளக்குறிச்சி: சின்னசேலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கினை புலனாய்வு செய்யும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு பள்ளியின் கட்டடத்தை இடித்து சேதப்படுத்திய நாகலூர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (20), சதீஷ்பாபு (20) ஆகியோரை கைது செய்தனர்.