கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் நேற்று (ஜூலை 25) கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையிலான காவல் துறையினர் கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலை விஐபி கார்டனில், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கைது செய்தனர்.