கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மண்ணாடிப்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (40), இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து விட்ட நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள ஸ்வீட்ஸ் ஸ்டால் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை செய்யும் கடைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று (அக்.28) பழனிசாமி தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.