கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தகடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் சுபாஷ். இவர், அதிகாலையில் இயற்கை உபாதை கழிக்கச் செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சுபாஷை காணவில்லை என்பதால் அக்கம்பக்கத்தில் அவரது உறவினர்கள் தேடி பார்த்துள்ளனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் கரும்பு வயலில் இறந்து கிடந்துள்ளார். காட்டுப்பன்றிகளுக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சுபாஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சடலத்தைக் கைப்பற்றிய திருபாலபந்தல் போலீசார், உடற்கூறாய்விற்காக விழுப்புரம் முண்டியப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.