விழுப்புரம்:திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைக்கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
மேலும், அதிமுக ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முறையாக பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பணிகள் தற்போது பறிக்கப்பட்டு தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், தூய்மைப் பணியாளர் பணிக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு ஆட்களை நியமித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.