கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகேயுள்ள குப்பத்து மேடு கிராமத்தில் வசிப்பவர் செல்வநாதன். கடந்த இரண்டு மாதங்களாக இவர் தனியாக வீட்டில் வசித்துவருகிறார். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று (டிசம்பர் 9) நள்ளிரவு அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
அவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 90 ஆயிரம் ரூபாய், 13 சவரன் நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி தெரியக்கூடாது என்பதற்காக அங்கிருந்த வயர்களையும் துண்டித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
கொள்ளையனின் தயாள மனம்