தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கள்ளக்குறிச்சி மாணவி இறப்பில் கொலைக்கான வாய்ப்புகள் அதிகம்' - உண்மை அறிவும் குழு - பள்ளி மாணவி தற்கொலை வழக்கு

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் கொலைக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வழக்கறிஞர்களின் உண்மை அறிவும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சுரேஷ்
Etv Bharat செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சுரேஷ்

By

Published : Aug 10, 2022, 4:09 PM IST

சென்னை:கள்ளக்குறிச்சி மாணவி மரணம் மற்றும் கலவரம் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வழக்கறிஞர்களின் உண்மை அறிவும் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய வழக்கறிஞர் சுரேஷ், "6 நாள்களாக 12 வழக்கறிஞர்கள் மூலம் இந்த உண்மை அறியும் விசாரணை நடைபெற்றது. எங்கள் விசாரணையின் அடிப்படையில் தற்கொலைக்கான அம்சங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கொலைக்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.

மாணவி விழுந்ததாக சொல்லப்படும் இடத்தில் ரத்தக்கறை இல்லை. சம்மந்தம் இல்லாத மற்ற இடங்களில் ரத்தக்கறை உள்ளது. மாணவியின் மரணத்தை அடுத்து எழுச்சியான வகையில் போராட்டம் நடைபெற்றது. கலவரம் எந்த அமைப்போ, திட்டமிட்டோ நடந்ததாகத் தெரியவில்லை.

உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காததே இந்தப் போராட்டத்திற்குக் காரணம். ஒரு சிலர் இதை தவறாகப்பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சில அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சுரேஷ்

மேலும், மாணவியின் மரணம் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களை மிகவும் பாதிப்பு உள்ளாகியுள்ளது. இதனால் மாணவியின் குடும்பத்திற்கு முதலில் இடைக்கால நிவாரண நிதியும், பின்னர் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஆசிரியர் அவமதித்ததால் பள்ளி மாணவர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details