தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் உண்டியல் உடைப்பு- ஊரடங்கை சாதுரியமாக பயன்படுத்திய திருடர்கள் - கள்ளக்குறிச்சி நியூஸ்

கள்ளக்குறிச்சி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்டியல்
உண்டியல்

By

Published : May 2, 2020, 3:01 PM IST

கள்ளக்குறிச்சி அருகே முடியனூர் கிராமத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட ஆதி அருணாசல ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தற்போது ஊரடங்கு உத்தரவால் பூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருடர்கள், கோயில் சுவர் ஏறி குதித்து, உண்டியலில் உள்ள பணத்தை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து அதிகாலையில் அர்ச்சகர் வழக்கம்போல் கோயிலைத் திறந்து பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

கோவில் உண்டியல் உடைப்பு

உண்டியல் திறந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் உண்டியலில் முப்பதாயிரத்திற்கும் மேல் பணம் இருக்கும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சிசிடிவியையும் அவர்கள் சேதப்படுத்தியதால், திருடர்கள் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து வரஞ்சரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ரத்த மாதிரிகளை கண்டறிய நடமாடும் வாகன பரிசோதனை அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details