தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து - ஸ்டாலின் - உங்கள் தொகுதியில் ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி: திமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கட்டாய அமல்படுத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

dmk leader stalin
dmk leader stalin

By

Published : Feb 12, 2021, 9:46 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மனுக்கள் மூலம் தங்களது குறைகளை ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.

மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்டாலின், "இன்னும் மூன்று மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகை கையாடல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நகைகள் ஒப்படைக்கப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டம் கட்டாய அமல்படுத்தப்படும்

அதேபோன்று புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்தப்படும்" என்று உறுதியளித்தார்.

இதையும் படிங்க:பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு - ஆந்திராவில் சோகம்

ABOUT THE AUTHOR

...view details