கள்ளக்குறிச்சி:கல்வராயன் மலை வட்டத்திலுள்ள 'இந்நாடு' கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில், போட்டியிட்ட ஜெயக்கொடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், சில மணி நேரங்களில் விஜயா என்பவர் வெற்றி பெற்றதாக மறு அறிவிப்பை வெளியிட்டனர். இதை எதிர்த்து ஜெயக்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (நவ.10) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 675 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்து தேர்தல் அலுவலர் கையெழுத்துடன் அளிக்கப்பட்ட ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.