தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தைத் திறந்துவைத்த ஸ்டாலின் - kallakuruchi latest news

உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தை முதலமைச்சர் காணொலி மூலம் திறந்துவைத்தார்.

traffic-police-station
traffic-police-station

By

Published : Aug 31, 2021, 11:17 AM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை திருச்சி சாலையில் ரூபாய் 58 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று (ஆகஸ்ட் 30) திறந்துவைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்கூடுதல் கண்காணிப்பாளர் சுப்புராயன் கலந்துகொண்டு போக்குவரத்து காவல் நிலையத்தை குத்துவிளக்கேற்றி பணிகளைத் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

அப்பொழுது உளுந்தூர்பேட்டை உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமொழியன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பன்டராஜ், காவல் ஆய்வாளர்கள் ராஜா, விஜி போக்குவரத்து உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்ட காவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க :கட்சியை அவமானப்படுத்துவதைக் கண்டித்தால் நீக்குவதா? - 'உண்மை விசுவாசிகள்' ஆதங்கம்

ABOUT THE AUTHOR

...view details