கள்ளக்குறிச்சி மாவட்டம் மகரூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (30), புவனேஸ்வரி(24) இருவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தேறியுள்ளது. சமீப காலமாக மகேந்திரன் தனது தந்தையிடம் சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டுள்ளார். தம்பியின் திருமணத்திற்கு பின்பே சொத்தைப் பிரிக்க முடியும் என தந்தை கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் மகேந்திரன் தனது முடிவில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்.
மகரூர் வனப்பகுதியில் கிடந்த வாலிபர் சடலம்: சந்தேகத்தைக் கிளப்பும் பின்னணி இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக தன் மனைவியின் ஊரான இலுப்பநத்தம் சென்று தங்கியதாகக் கூறப்படுகிறது. நேற்றிரவு குடும்பத்தினரிடம் அலைபேசியில் பேசிய மகேந்திரன், விஷம் அருந்தியதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்த மகேந்திரனின் தந்தை குணசேகர், மகனைத் தேடி அலைந்திருக்கிறார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மகரூர் செல்லும் வனப்பகுதி சாலையில், இருசக்கர வாகனத்துடன் மகேந்திரனின் சடலம் கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவலளித்தனர். வரஞ்சரம் காவல்துறையினருக்கு வனத்துறையினர்கொடுத்த தவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சடலத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மகேந்திரனின் கடைசி அழைப்பில் அவர் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறியிருந்தாலும், திடீரென அவர் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் என்ன?, இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்கிறதா? என்பது குறித்து வரஞ்சரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வாங்க வேலை வாங்கித் தரேன்.. நம்பி சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு!