கள்ளக்குறிச்சி:திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம். இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தனது முகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முகமூடியை மாட்டிக்கொண்டு, கருணாநிதியின் உருவத்தை வரைந்தார்.
முதலமைச்சர் முகமூடியுடன் கருணாநிதி உருவம் வரைந்த ஓவியாசிரியர் - கருணாநிதி
முகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முகமூடியை மாட்டிக்கொண்டு, கருணாநிதி உருவத்தை பகுதிநேர ஓவிய ஆசிரியர் ஒருவர் வரைந்து அசத்தியுள்ளார்.
முதலமைச்சராக மாறி கருணாநிதி உருவத்தை வரைந்த ஓவியாசிரியர்.!
இதனை 30 நிமிடங்களில் வரைந்தார். இதுகுறித்து வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு ஓவிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க:கருணாநிதி உடனான கடைசி சந்திப்பு குறித்து நடிகர் சிவகுமார் உருக்கம்
Last Updated : Jun 3, 2022, 2:12 PM IST