தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்பனை செய்து வந்த தாய், மகன் கைது! - Sale of cannabis in Ulundurpet

உளுந்தூர்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்து வந்த தாய், மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை செய்து வந்த  தாய் மகன் கைது
கஞ்சா விற்பனை செய்து வந்த தாய் மகன் கைது

By

Published : Nov 4, 2020, 10:32 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கந்தசாமிபுரம் பகுதியில் கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது கந்தசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சாய்ராபானு (42), அசேன்முகமது (24) ஆகியோர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து காவல் துறையினர் அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். ஒரே குடும்பத்தில் தாய், மகன் ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்து கைதான சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர்; மடக்கி பிடித்த காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details