தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாமியை யார் தூக்குவது...?; இருதரப்பினர் வாக்குவாதத்தால் கோயில் திருவிழாவிற்கு விதிக்கப்பட்ட தடை - வைகாசி விசாகம்

மணலூர்பேட்டை அரங்கநாதர் கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், கோயில் நிர்வாகம் நிகழ்ச்சியை தடை செய்தது.

சாமியை யார் தூக்குவது...? ; இருதரப்பினர் வாக்குவாதத்தால் கோயில் திருவிழா தடை
சாமியை யார் தூக்குவது...? ; இருதரப்பினர் வாக்குவாதத்தால் கோயில் திருவிழா தடை

By

Published : Oct 6, 2022, 3:57 PM IST

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே இரண்டாயிரம் ஆண்டுகள் மிகவும் பழமையான ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் நவராத்திரியின் 10ஆம் நாள், அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில், அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்று சாமி வீதி உலா வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக, இத்திருவிழாவின்போது சாமியைத் தூக்குவதில் இருதரப்பினருக்கிடையே பிரச்னை நிலவி வருகிறது.

இது சம்பந்தமாக இரு தரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வைகாசி மாதம் வைகாசி திருவிழாவை ஒரு தரப்பினர் சாமி ஊர்வலம் நடத்த உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன் அடிப்படையில் ஒரு தரப்பினர் வைகாசி விசாகத்தில் அரங்கநாதரை கருட வாகனத்தில் ஊர்வலமாக தூக்கி வந்து கொண்டாடினார்கள்.

இதனை எதிர்த்து மற்றொரு தரப்பினார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த நிலையில் இந்த ஆண்டு புரட்டாசி மாத நவராத்திரி ஆன பத்தாம் நாள் திருவிழாவான நேற்று அரங்கநாதர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வீதி உலா வர தயாராக இருந்தார்.

இந்நிலையில் இரு தரப்பினரிடையே சாமியை யார் தூக்குவது என்ற பிரச்னை நிலவியதால் அங்கு கோவில் நிர்வாகம் இரு தரப்பினர் சார்பில் யாரும் தூக்க வேண்டாம் என்றுகூறி, கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி வீதி உலா வர ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், இரு தரப்பினரும் ஒத்துப் போகாததால் கோயில் நிர்வாகம் சார்பில் இந்த ஆண்டு அம்பு எய்தல் நிகழ்ச்சி மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சியை நடத்தாமல் தடை செய்தது. இதனால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

சாமியை யார் தூக்குவது...?; இருதரப்பினர் வாக்குவாதத்தால் கோயில் திருவிழாவிற்கு விதிக்கப்பட்ட தடை

இதில் திருக்கோவிலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பழனி மற்றும் காவல் ஆய்வாளர் பாபு, மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் ராஜசேகரன் தலை மேலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணத்தில் இரு தரப்பினரிடையே சமரசம் பேச்சில் ஈடுபட்டனர். இதனால் ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் பரபரப்பாகவே காணப்பட்டது.

இதையும் படிங்க: குலசை தசரா திருவிழாவின் மகிஷா சூரசம்ஹாரம்

ABOUT THE AUTHOR

...view details