தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிக்கன திருமணம்: வித்தியாச தாம்பூலம் - கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே எளிமையான முறையில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சானிடைசர், முகக்கவசம், கையுறை அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது.

சிக்கனமான திருமணத்தில் வித்தியாசமாக வழங்கப்பட்ட தாம்பூலம்
சிக்கனமான திருமணத்தில் வித்தியாசமாக வழங்கப்பட்ட தாம்பூலம்

By

Published : Apr 29, 2020, 3:42 PM IST

Updated : Apr 29, 2020, 6:15 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவருக்கும், பிரியா என்பவரும் இடையே ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக இவர்களது திருமணம் புகைப்பட்டி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று எளிமையான முறையில் நடைபெற்றது.

சிக்கனமான திருமணத்தில் வித்தியாசமாக வழங்கப்பட்ட தாம்பூலம்

இந்நிலையில் திருமணத்தில் மணமகன் பெற்றோர், மணமகள் பெற்றோர் உள்ளிட்ட 20 பேர் மட்டுமே கலந்துகொண்டு தகுந்த இடைவெளியை பின்பற்றி மணமக்களை வாழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான சானிடைசர், முகக்கவசம், கையுறை அடங்கிய தாம்பூலம் மணமக்களால் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ட்ரோன் கண்காணிப்பில் சென்னையின் முக்கிய இடங்கள்!

Last Updated : Apr 29, 2020, 6:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details