சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம்,எறையூரில் உள்ள அருள் சகோதரிகளால் நடத்தப்படும் துறவற கன்னியர் சபையில் சேர்ந்து கௌசல்யா ராஜேந்திரன் (25) என்ற மாணவி இளங்கலை கணிதவியலில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர், பிப்ரவரி 16ஆம் தேதி கிணற்றில் தவறி விழுந்ததாக கல்லூரி நிவாகத்தினர், காவல் துறைக்கு தகவலின் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மீட்புக் குழுவினர் மாணவியின் உடலை மறுநாள் பிப்.17ஆம் தேதி சடலமாக மீட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், இன்று (ஏப்.13) பத்திரிகையாளர்களை சந்தித்த, உண்மை அறியும் குழுவினர் கௌசல்யாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அவர்களது விசாரணையில் மாணவி தற்கொலை செய்யவில்லை எனத் தெரிவித்தனர்.
மேலும் மாணவியின் நண்பர்களிடம் கேட்கும்போது கல்லூரியின் தலைமை அருள்சகோதரி புனிதா, கௌசல்யாவை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியும், ‘தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்து வந்து நீயெல்லாம் கன்னியாஸ்திரி ஆக நினைக்கலாமா’ என பலமுறை அந்த மாணவியிடம் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.