கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2018 ஆம் ஆண்டு படித்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து, வட்டாட்சியர் அலுவலத்திற்கு பேரணியாகச் சென்று வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
‘லேப் டாப் வழங்கவில்லை’ -உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலம் முற்றுகை! - Kallakurichi news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018 ஆண்டு படித்த மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்காததை கண்டித்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக சென்று வட்டாட்சியரை முற்றுகையிட்டனர்.
‘லேப் டாப் வழங்கவில்ல’ -உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணாக்கர்கள்!
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அலுவலர்கள், தேர்தல் முடிந்தவுடன் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க...திமுக நேர்காணல் தேதி அறிவிப்பு