கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விகேஎஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் ரமேஷ். இவரது மகன் ராகுல். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கரோனா நோய் தொற்று காரணமாக கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராகுல் நேற்று (ஏப்.21) மதியம் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் மாலை 3 மணிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ராகுல் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்க, உடன் இருந்த நண்பர்கள் ராகுலை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.