தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2020, 1:55 PM IST

ETV Bharat / state

தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்: கிராம மக்கள் அவதி

கள்ளக்குறிச்சி: தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

strea
strea

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையின் இடையே நரியன்ஓடை பகுதியில் 100 மீட்டர் அளவில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் நரியன்ஓடையில் வெள்ளப் பெருக்கெடுக்கும் போது இந்தப் பாலம் மூழ்கிவிடும்.

தண்ணீரில் மூழ்கிய ஓடைதரைப்பாலம்

இந்த நிலையில் நிவர் புயலின் தாக்கம் காரணமாக நேற்று (நவம்பர் 25) நள்ளிரவு மேட்டுக்குப்பம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வயல்வெளிப் பகுதிகளில் தேங்கிய தண்ணீர் ஓடைதரைப்பாலத்தை மூழ்கடித்தது. உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் மேட்டுக்குப்பம் ஆலடி, பாலக்கொல்லை, மணக்கொல்லை, உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details