கள்ளக்குறிச்சி அருகே உள்ள வி.கூட்டுரோட்டில் பிரபல தனியார் பால் நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது. இங்குதான் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பால் கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில், இந்த நிறுவனம் திடீரென பால் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளது.
திடீரென கொள்முதலை நிறுத்திய நிறுவனம்; சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி: தினசரி 7.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் நிறுவனம் திடீரென கொள்முல் செய்வதை நிறுத்தியதால் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரிவித்து, பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
![திடீரென கொள்முதலை நிறுத்திய நிறுவனம்; சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் Kallakurichi milk waste by farmers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:25:21:1594882521-tn-klk-01-kallakurichi-milk-waste-formers-news-tn10026-16072020071327-1607f-1594863807-1022.jpg)
இதனைக் கண்டித்து நயினார்பாளையம் அருகே கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாலை தார்ச் சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தினசரி 7.5 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்த நிறுவனம், திடீரென கொள்முல் செய்வதை நிறுத்தியதால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், அரசியல் செல்வாக்கில் ஆளுங்கட்சி பிரமுகர் பால் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அவர் அந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இல்லையென்றால் அரசே தங்களது பாலை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.