கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, கோட்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (48). இவர், உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். பணிமலை கட்டுப்பாட்டு பிரிவை கவனித்து வரும் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளும் மற்ற நிர்வாகிகளும் சேர்ந்து முருகனுக்கு பணி வழங்காமல் அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் பணிமனைக்கு வந்த முருகனிடம், தடம் எண் 122 ஆர்.டி. பேருந்தில் பணி செய்ய வேண்டும் என்று டூட்டி சார்ட்டில் கையெழுத்து பெற்ற பின், நடத்துனர் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டாளர் பணியை பார்க்கும் ஒருவரும் ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரும் கூறினர்.