கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே உள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குற்ற பதிவேடுகள், நிலுவையில் உள்ள வழக்குகள், காவலர் வருகைப்பதிவேடு போன்ற பதிவுகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக், காவல்நிலைய வளாகத்தை தூய்மை வைத்திருக்க வேண்டும் என்றும் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.