கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகேயுள்ள மண்மலை கிராமத்தில் வசித்துவருபவர் ராமசாமி (75) .இவரை ஏமாற்றி இவரது மகன் சொத்தை எழுதி வாங்கிக் கொண்டதாகவும் இவர்களை கொடுமைப்படுத்திக் கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனடிப்படையில் ராமசாமி கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் காவல் துறையினர் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.