தமிழ்நாட்டில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. விசாரித்ததில் அவர்கள் டெல்லி சென்று திரும்பியது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 6 பேரை தனிமைப்படுத்தி தீவிரக் கண்காணிப்பு! - undefined
கள்ளக்குறிச்சி: டெல்லியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றுவந்ததாகக் கூறப்படும் நபர்களில் 6 பேரை தனிமைப்படுத்தி தீவிரக் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
six-person-quarantine-due-to-corona-virus-symptoms
எனவே இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து டெல்லி சென்றவர்களின் விவரம் உடனடியாக சேகரிக்கபட்டு, நேற்று மாலை முதல் அவர்களை தனிமைப்படுத்தும் பணியில், சுகாதாரத் துறை ஈடுபட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக, 6 பேரை சுகாதாரத் துறையினர் அடையாளம் கண்டு, அவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.