தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உளுந்தூர்பேட்டை அருகே 672 மதுபாட்டில்கள் பறிமுதல்; இருவர் கைது! - கள்ளக்குறிச்சி அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே விற்பனைகாக கடத்தி வரப்பட்ட 672 மதுபாட்டில்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

உளுந்தூர்பேட்டை அருகே 672 மதுபாட்டில்கள் பறிமுதல்; இருவர் கைது!
உளுந்தூர்பேட்டை அருகே 672 மதுபாட்டில்கள் பறிமுதல்; இருவர் கைது!

By

Published : May 26, 2021, 11:59 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எல்லை கிராமத்தில் எலவனாசூர்கோட்டை காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தமிழ்நாடு அரசு இணை உணவுவிநியோகம் துறையின் அனுமதி பெற்றது போன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். அப்போது வாகனத்தின் ஓட்டுநர் காவலர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், சந்தேகமடைந்த காவலர்கள் வாகனத்தை சோதனையிட்டனர். அப்போது, அதில் நாதாமூரில் சட்டவிரோதமாக விற்பனை கர்நாடகத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன், சக்திவேல் ஆகிய இருவரை காவல்துறையின் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 672 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க : தமிழைப் புறக்கணித்து சீன மொழியை ஆதரிக்கும் இலங்கை: கொந்தளிக்கும் சீமான்!

ABOUT THE AUTHOR

...view details