தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் திருட்டு: மூன்று டிராக்டர்கள் பறிமுதல்! - tamilnadu latest news

உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய மூன்று டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மணல் திருட்டு
மணல் திருட்டு

By

Published : Jun 4, 2021, 9:29 PM IST

கள்ளக்குறிச்சி: களவானூர் ஆற்றுப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மூன்று டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் அள்ளியுள்ளனர்.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அடுத்த களவானூர், பாதூர், வண்டிப்பாளையம் உள்ளிட்ட ஆறுகளில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல் குறித்து உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது களவானூர் ஆற்றுப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் மூன்று டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அங்கு சென்ற காவல்துறையினரை கண்டதும் வண்டிகளை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து ஜேசிபி, மூன்று டிராக்டர்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், பின்னர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டிற்கு வராதீங்க..போன்ல கேட்டுக்கோங்க..கடிதம் எழுதிவிட்டு ரயில்வே காவலர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details