கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவங்கூர் ஏரி அருகே மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று இரவு(நவ.3) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
கிராவல் மணல் கடத்திய 3 பேர் கைது! - Kallakurichi crime news
கள்ளக்குறிச்சி: சிறுவங்கூர் ஏரியில் சட்டவிரோதமாக கிராவல் மணல் கடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
மணல்
அப்போது அங்கு மோ.வன்னஞ்சூரைச் சேர்ந்த சின்னதம்பி, ஹரி கிருஷ்ணன், குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த இளையராஜா ஆகியோர் கிராவல் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் கிராவல் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்ததோடு, மணல் கடத்தலுக்கு வைத்திருந்த மூன்று லாரிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.